சுடச்சுட

  

  ஏர்செல்-மேக்சிஸ்: ப.சிதம்பரத்தின் பங்கு என்ன? அமலாக்கத் துறை விசாரணை

  By DIN  |   Published on : 18th April 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chidambaram

  ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
  இதுதொடர்பாக, அந்தத் துறை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
  ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் வெளிநாட்டு முதலீடுகள் மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டதில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
  இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு முதலீடு சுமார் ரூ. 3,500 கோடி ஆகும். அரசு விதிகளின்படியும், வெளிநாட்டு முதலீடுகள் மேம்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படியும் ரூ. 600 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவே ஒப்புதல் அளிக்க வேண்டும். எனினும், இதை மீறும்வகையில் ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, 'சிபிஐ தரப்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  இதையடுத்து, சிபிஐ தனது விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்தது. இதேபோல், அமலாக்கத் துறையும் தனது விசாரணை நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai