சுடச்சுட

  

  கடமைகளை நிறைவேற்றாத முந்தைய காங்கிரஸ் அரசு: மோடி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 18th April 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தனது கடமைகளை நிறைவேற்றாமல், மாநில அரசுகள் மீது பழி சுமத்தி வந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
  யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலியில் உள்ள சில்வாஸா நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
  குஜராத் மாநிலத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் நில உரிமை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, பழங்குடியின மக்களைத் தூண்டும் வகையில் மாநில அரசுக்கு எதிராக, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
  நான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகுதான், பழங்குடியின மக்களுக்கு நில உரிமை வழங்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை அல்ல, அது மத்திய அரசின் கடமை என்பது தெரியவந்தது. இதற்கு முன்னர் மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட நில உரிமை வழங்கவில்லை.
  விறகு அடுப்பில் சமைக்கும் பெண்களின் உடல் நலனைக் கவனத்தில் கொண்டு, எனது அரசு இதுவரை 2 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளது என்றார் அவர்.
  முன்னதாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த சிலருக்கு நில உரிமை ஆவணங்களை பிரதமர் வழங்கினார்.
  அதுமட்டுமன்றி, ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி வழங்கினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai