சுடச்சுட

  

  'தலாக்' விவகாரத்தில் மெளனம் ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு யோகி ஆதித்யநாத் கேள்வி

  By DIN  |   Published on : 18th April 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  YogiAdityanath

  தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்காமல் மெளனம் காப்பது ஏன்? என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
  லக்னெளவில் திங்கள்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் 91-ஆவது பிறந்த தின விழாவில் பங்கேற்ற அவர் இது தொடர்பாகப் பேசியதாவது: நாட்டில் இப்போது மிகமுக்கியமான பிரச்னை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. முஸ்லிம்கள் மத்தியில் உள்ள தலாக் விவாகரத்து முறை குறித்த சர்ச்சைதான் அது. ஆனால், இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.
  மகாபாரதத்தில் திரெளபதி துகிலுரியப்பட்டபோது, அவையில் இருந்த அனைவரும் மெளனமாக இருந்ததை நினைவூட்டுவதாக இன்றைய எதிர்க்கட்சித் தலைவர்களின் மெளனம் உள்ளது. அப்போது, தனது நிலைக்கு யார் காரணம் என்ன? என்று திரெளபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, 'தவறு இழைத்தவர்கள் மட்டுமல்ல, தவறு நடக்கும்போது அதனைத் தட்டிக் கேட்காமல் அமைதியாக இருந்து தவறு நடக்க அனுமதிப்பவர்களுக்கும் தவறில் சமபங்கு உண்டு' என்று விதுரர் பதிலளித்தார். இப்போது தலாக் விவாகரத்தில் அதேபோன்ற சூழ்நிலைதான் உள்ளது. முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் மெளனமாக இருக்கின்றனர்.
  தலாக் முறையை முடிவுக்குக் கொண்டு வர பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதுதான் சரியாக இருக்கும் என்றார் யோகி ஆதித்யநாத்.
  முன்னதாக, 'முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்யும். தலாக் விவகாரத்தில் முஸ்லிம் பெண்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்' என்று பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பேசினார். இந்நிலையில், அதே விவகாரத்தை மையமாகவைத்து எதிர்க்கட்சிகளை யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
  முஸ்லிம் சட்டவாரியம் பதில்: இது குறித்து கருத்து தெரிவித்த அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் தலைவர் மௌலானா ரஹ்மானி 'தலாக் குறித்து யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது முட்டாள்தனமானது. நல்ல மனநிலையில் இருப்பவர்கள், தலாக் முறையை திரெளபதி துகிலுரியப்பட்டதுடன் ஒப்பிடமாட்டார்கள். இதற்கு மேல் அவரது பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
  முன்னதாக, முஸ்லிம் தனிச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியல்சாசன ரீதியிலான உரிமை தனக்கு இருப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் உறுதிபடத் தெரிவித்திருந்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai