சுடச்சுட

  

  தில்லியில் தமிழக விவசாயிகள் சாட்டையால் அடித்துப் போராட்டம்

  By புதுதில்லி  |   Published on : 18th April 2017 12:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில் போராடும் விவசாயிகள் இன்று சாட்டையடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில், பயிர் கடன் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டம் 36ஆவது நாளை எட்டியுள்ளது.

  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு விதமான போராட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் இன்று சாட்டையடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மோடியை போன்ற புகைப்படம் அணிந்த நபர் ஒருவர், விவசாயிகளை சாட்டையால் அடிப்பதுபோன்ற போராட்டத்தை அரங்கேற்றினர். அப்போது விவசாயி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai