சுடச்சுட

  

  ராபர்ட் வதேரா நில பேர விவகாரம்: திங்க்ரா குழுவின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

  By DIN  |   Published on : 18th April 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஹரியாணாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், அவரது நிறுவனங்களுக்கும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பான நீதிபதி எஸ்.என்.திங்க்ரா குழுவின் விசாரணை அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
  ஹரியாணாவில் கடந்த 2005 முதல் 2014 வரை, பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, ராபர்ட் வதேரா மற்றும் அவரது நிறுவனங்களுக்கும், இதர நிறுவனங்களுக்கும் குர்கான் நகரில் பல்வேறு திட்டங்களுக்காக நில ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த பாஜக, இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.என்.திங்க்ரா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவானது, 182 பக்கங்கள் அடங்கிய தனது அறிக்கையை, ஹரியாணா அரசிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சமர்ப்பித்தது. வதேரா உள்ளிட்டோருக்கு நில உரிமங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  இந்நிலையில், எஸ்.என்.திங்க்ரா குழுவின் அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் ஹரியாணா அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது.
  முன்னதாக, தனக்கு எதிராக விசாரணை குழுவை அமைத்தது, ஹரியாணா பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராபர்ட் வதேரா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai