சுடச்சுட

  
  vijay_mallya

   

  லண்டன்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.     

  இந்தியாவைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகளின் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.9000 கோடி அளவுக்கு கடனைப்பெற்று விட்டு, கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்.

  சில நாட்களுக்குப் பிறகு அவர் இங்கிலாந்தில் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவருக்கு எதிராக இந்திய நீதி மன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தன.ஆனால் அவற்றை மல்லையா மதித்து நடக்கவில்லை.மேலும் தான் ஒரு இங்கிலாந்து குடிமகன் என்று அவர் வாதிட்டார்.

  அதற்கு பிறகு இன்டர்போல் என்னும் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ச்சியான நடவடிக்கைகளின் முடிவில் உரிய ஆவணங்கள் அங்குள்ள காவல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விஜய் மல்லையா லண்டனின் ஸ்காட்லாந்த்து யார்டு போலீஸாரினால் இன்று கைது செய்ப்பட்டார்.

  ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்று தெரிகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai