சுடச்சுட

    

    அதிமுக உட்கட்சி பிரச்னைக்கு மத்திய அரசோ, பாஜகவோ காரணமில்லை: வெங்கய்யா நாயுடு

    By  புதுதில்லி,  |   Published on : 19th April 2017 11:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ve

    அதிமுக உட்கட்சி பிரச்னைக்கு மத்திய அரசோ, பாஜகவோ காரணமில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தில்லியில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் உட்கட்சி பிரச்னைக்கு மத்திய அரசோ, பாஜகவோ காரணம் இல்லை. ஜெயலலிதாவுக்கு மரியாதை செய்யும் வகையில் அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    தமிழக மக்களின் நலனுக்காகவும் அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். விஜய்மல்லையாவை இந்திய கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார். 

    மத்தியில் ஆளும் பாஜக, அதிமுக அரசுக்கு எதிராக வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என எல்லா சக்திகளையும் பயன்படுத்துகிறது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai