சுடச்சுட

  

  உத்தரப் பிரதேசத்தில் 44 ஐஏஎஸ் அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை பணியிடமாற்றம் செய்து அந்த மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டது.
  ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான லக்னௌ வளர்ச்சி ஆணையத்தின் துணைத் தலைவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
  முதல்கட்டமாக கடந்த புதன்கிழமை 20 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் தகவல் தொடர்புத் துறை முதன்மைச் செயலர் நவநீத ஷெகலும் ஒருவர். இவர், முந்தைய சமாஜவாதி அரசில் செல்வாக்கு பெற்றிருந்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 44 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களாகவும், ஆணையர்களாகவும் பதவி வகித்து வருபவர்கள் ஆவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai