சுடச்சுட

  

  கடன்பாக்கி எதிரொலி: தமிழகத்துக்கான மின்சாரத்தை நிறுத்த என்டிபிசி நிறுவனம் முடிவு

  By DIN  |   Published on : 19th April 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரூ.1,388 கோடி கடன் பாக்கியைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தை நிறுத்துவது என்று தேசிய அனல்மின் கழக நிறுவனத்தின் (என்டிபிசி) கூட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
  இதுதொடர்பாக தமிழகம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்கு என்டிபிசி தமிழ்நாடு எரிசக்தி நிறுவனம் (என்டிஇசிஎல்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நிலுவையில் இருக்கும் ரூ.1,388 கோடி கடன்தொகையை செலுத்தாத காரணத்துக்காக, தனது வள்ளுர் அனல் மின்நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்படும் 1,299 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து என்டிஇசிஎல் வட்டாரங்கள் கூறுகையில், 'மின்சாரம் ஒழுங்குபடுத்துதல் அல்லது துண்டித்தல் தொடர்பான முடிவு, வரும் 26-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். இதனால், 3 மாநிலங்களிலும் மின்சார விநியோகத்தில் தீவிர பாதிப்பு ஏற்படும்' என்றன.
  என்டிபிசி நிறுவனம், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமே, என்டிஇசிஎல் ஆகும். தமிழகத்தின் வள்ளூரில் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்தக் கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம், மின்சார உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது. தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு வள்ளூர் அனல் மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் அனுப்பப்பட்டு வருகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai