சுடச்சுட

  

  கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் 7.45 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு ஓரிரு நிமிடங்கள் நீடித்த நில நடுக்கம் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி திறந்த வெளிக்கு ஓடினர்.
  கடந்த ஒரு மாதமாக கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் உணரப்பட்டு வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் பெங்களூரில் கெங்கேரி, கார்வேபாளையா, மாகடி சாலை, பசவனகுடி, காமாக்ஷிபாளையா, கிரிநகர், வித்ராண்யபுரா உள்ளிட்ட பகுதிகளிலும் மண்டியா, ராம்நகர், நெலமங்கலா, சாம்ராஜ் நகர், பழைய மைசூரு உள்ளிட்ட பகுதிகளிலும் பெரிதும் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
  நில நடுக்கத்தின் அளவு 3.4 ரிக்டர் அளவாக இருந்ததால் பெரும் சேதம் ஏற்படவில்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் சீனிவாஸ் ரெட்டி தெரிவித்துள்ளார். ஒருசில இடங்களில் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
  தென் கர்நாடகத்தில் நில அதிர்வு உணரப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் உள்ளிட்ட எந்தப் பாதிப்பும் ஏற்படாத மாநிலம் எனக் கூறப்பட்டு வந்த கர்நாடகத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுவருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai