சுடச்சுட

  

  காஷ்மீரில் மாணவர்கள் போராட்டம்: கல்வி நிலையங்கள் மூடல்

  By DIN  |   Published on : 19th April 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஷ்மீர் பள்ளத்தாக்கில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களும் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
  இதுதொடர்பாக, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: புல்வாமா சம்பவத்தைக் கண்டித்து மாணவர்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரிலுள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை மூடுமாறு கோட்ட ஆணையர் பஷீர் கான் உத்தரவிட்டார். இதன்படி, அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டன என்றார் அந்த அதிகாரி.
  புல்வாமா பகுதியிலுள்ள அரசுக் கல்லூரியில் மாணவர்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸார் தடியடி நடத்தினர். இதில், சில மாணவர்கள் காயமடைந்தனர்.
  இதைக் கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான கல்வி நிலையங்களில் மாணவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  அப்போது மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர். மேலும், காவலர்கள் 5 பேரும்காயமடைந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai