சுடச்சுட

  

  குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு

  By DIN  |   Published on : 19th April 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்ய சர்வதேச நீதிமன்றத்தை அணுகும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  தில்லி உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ராகுல் சர்மா என்பவர், இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரியான ஜாதவ் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல், ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையும் தவறாகும். ஜாதவ் விவகாரத்தில் நேர்மையான முறையில் வழக்கு விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதில், பாகிஸ்தான் ராணுவம் தோல்வியடைந்து விட்டது.
  எனவே, பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷண் ஜாதவை விடுவிப்பது, குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகள் கிடைக்கச் செய்வது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அணுக வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
  இதேபோல், பிற நாடுகளில் கடத்தப்பட்ட இந்தியர்களை விடுதலை செய்வது தொடர்பான வரைவு உடன்படிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  இந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஏப்.19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. அப்போது ஜாதவை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai