சுடச்சுட

  

  ஜாதிச் சான்றிதழில் தந்தை பெயரை கட்டாயமாக்கக் கூடாது: மேனகா காந்தி வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 19th April 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  menakagand

  ஜாதிச் சான்றிதழில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கக் கூடாது என்று மத்திய மகளிர் மேம்பாடு - குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
  இதுதொடர்பாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அக்கடிதத்தில் மேனகா காந்தி குறிப்பிட்டிருப்பதாவது:
  குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் பெறும்போது, அதில் தந்தை பெயரைக் குறிப்பிட்டே ஆக வேண்டிய அவசியம் தற்போது உள்ளது. சமூகத்தில் கணவனை விட்டுப் பிரிந்து வாழும் பெண்கள், தங்களது குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும்போது இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
  இதுதொடர்பாக பல பெண்கள் என்னிடம் முறையிட்டனர். திருமண பந்தம் முறிந்து தனித்து வாழும் பெண்களுக்கு சட்டத்தில் உள்ள சில துளைகளை காரணம் காட்டி பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
  இந்தப் பிரச்னைகளைக் களைய மத்திய மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
  கணவனைப் பிரிந்து வாழும் மகளிருக்குச் சாதகமான வகையில் சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஜாதிச் சான்றிதழில் தந்தை பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
  இதேபோன்று பட்டப் படிப்புச் சான்றிதழிலும் தந்தை பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு அண்மையில் மேனகா காந்தி கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai