சுடச்சுட

  

  தென்மேற்குப் பருவமழை சராசரி அளவில் இருக்கும்: இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை

  By புதுதில்லி  |   Published on : 19th April 2017 07:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rain

  இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கம்போல் பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சித் துறை கணித்துள்ளது.

  இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தலைவர் கே.ஜே.ரமேஷ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை சராசரி அளவில் பெய்யும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான மழைப்பொழிவு இருக்கும்.

  நீண்ட கால சராசரியின் அடிப்படையில், இந்த ஆண்டு மழைப்பொழிவின் அளவு வழக்கம்போல் இருக்கும் என்றார் அவர்.

  கடந்த ஆண்டு வானிலை ஆராய்ச்சித் துறை விடுத்திருந்த கணிப்பில், சராசரிக்கும் அதிகமான மழை பெய்யும் என்று கூறப்பட்டது. எனினும், அப்போது சராசரி அளவில் தான் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

  மேலும், நாட்டின் தெற்குப் பகுதியில் குறைவான மழைப்பொழிவு இருந்தது. இதனால் தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கடும் வறட்சி நிலவியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai