சுடச்சுட

  

  மணிப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏ கின்சுவான்ஹா அக்கட்சியிலிருந்து விலகி ஆளும் பாஜக-வில் இணைந்தார்.
  60 உறுப்பினர்கள் அடங்கிய மணிப்பூர் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 21 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், பிற கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அங்கு ஆட்சியைப் பிடித்தது.
  இந்நிலையில், அங்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்துள்ளார்.
  சுராசந்த்பூர் மாவட்டம், சிங்காட் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏ-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கின்சுவான்ஹா. இவர், இம்பாலிலுள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தார்.
  அப்போது தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும், பாஜக-வில் இணைவதாகவும் அவர் அறிவித்தார். அவரை மாநில முதல்வர் பிரேன் சிங், மணிப்பூர் மாநில பாஜக தலைவர் பாபாநந்த சிங் ஆகியோர் வரவேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai