சுடச்சுட

    

    மல்லையா உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை விரைவில் குற்றப்பத்திரிகை

    By DIN  |   Published on : 19th April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐடிபிஐ வங்கிக் கடன் மோசடி வழக்கில் மல்லையா உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை விரைவில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளது.
    இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
    ஐடிபிஐ வங்கிக் கடன் மோசடியில் கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விஜய் மல்லையா மட்டுமல்லாது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
    இந்த வழக்கு தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் அடுத்த சில நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது என்றார்.
    இதே வழக்கை சிபிஐ-யும் ஏற்கெனவே விசாரித்து வருகிறது. அதில் கடந்த ஜனவரி மாதம் மல்லையாவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் விமானப் பராமரிப்பு, உதிரி பாகங்கள் வாங்குவது போன்ற செலவுகளுக்காக ஐடிபிஐ வங்கியிடம் இருந்து ரூ.860.92 கோடி கடன் பெறப்பட்டது.
    இந்த கடன் தொகையை நிறுவனத்துக்காக செலவிடாமல் ரூ.423 கோடியில் வெளிநாட்டில் மல்லையா சொத்து வாங்கி
    னார். இந்தக் கடனைப் பெறுவதில் கிங்ஃபிஷர் அதிகாரிகளும், கடனை வழங்குவதில் ஐடிபிஐ வங்கி அதிகாரிகளும் இணைந்து சதி செய்தனர் என்பதும் முக்கியக் குற்றச்சாட்டாகும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai