சுடச்சுட

  

  முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்துக்குத் தடை: உ.பி. அமைச்சர் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 19th April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முத்தலாக் முறையை ஆதரிக்கும் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தை தடை செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மோஸின் ரஸா வலியுறுத்தியுள்ளார்.
  இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியமானது இஸ்லாமிய மக்களின் நலனுக்காக என்றும் பாடுபட்டது கிடையாது. மாறாக, இஸ்லாமியப் பெண்களை பாதிக்கும் முத்தலாக் விவாகரத்து முறைக்கு ஆதரவாக அந்த வாரியம் குரல் கொடுத்து வருகிறது. எனவே, அந்த வாரியத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்.
  முத்தலாக் முறையானது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. இந்தியாவில் செயல்படும் எந்தவொரு அமைப்பும் அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டுதான் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத ஓர் அமைப்பு தடை செய்யப்படத்தான் வேண்டும்.
  முத்தலாக் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன். முத்தலாக் முறைக்கு முடிவு கட்டும் சட்டத்தை இந்தியாவில் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இஸ்லாமியப் பெண்களுக்கான நீதி நிலைநாட்டப்படும் என்றார் மொஹ்ஸின் ரஸா.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai