சுடச்சுட

  
  SURESHPRAB

  ரயில்கள் காலதாமதமானால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  ரயில்கள் உரிய நேரத்தில் வருவது இல்லை என்று புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து ரயில்வேயின் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் அமைச்சர் சுரேஷ் பிரபு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
  ரயில்வே இணையதளத்தில் உள்ள கால அட்டவணைப்படி அனைத்து ரயில்களையும் இயக்குவதில் ரயில்வே அதிகாரிகள் முனைப்பு காட்டவேண்டும். தேசிய அளவில் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுவது குறித்த புள்ளி விவரத்தின்படி, கடந்த ஏப்ரல் 1 முதல் 16-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 79 சதவீத ரயில்கள்தான் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 84 சதவீத ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில்கள் காலதாமதம் குறித்து புகார்களும் அதிகம் வந்துள்ளன.
  எனவே, ரயில்களை சரியான நேரத்தில் இயக்குவதில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக, இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை இரவுப் பணியில் கூடுதலாக மூத்த அதிகாரிகள் பணியில் இருக்க வேண்டும். அவர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றனவா? என்பதை கண்காணித்து உடனுக்குடன் நிலைமையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்கள் காலதாமதமானால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai