சுடச்சுட

    

    ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்

    By DIN  |   Published on : 19th April 2017 01:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gold_bars

    மும்பை: மும்பை விமான நிலையத்தில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து தங்க கட்டிகள் மற்றும் நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் இரண்டரை கிலோ எடையுள்ள தங்கத்தை கடத்த முயன்ற நபரை அவர்கள் கைது செய்தனர்.

    மேலும், அந்த நபரிடம் இருந்த தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.70 லட்சம் என்று கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai