சுடச்சுட

  

  சீறிப் பறந்த கார்..சிதறிய உயிர்கள்: புனே சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து (சிசிடிவி வீடியோ இணைப்பு)

  By DIN  |   Published on : 19th April 2017 04:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pune_accident

   

  புனே: சாலையைக் கடப்பதற்காக தடுப்பின் நடுவில் நடுவில் காத்திருந்த மக்களின் மீது கண்மூடித்தனமாக மோதிய காரினால், மூன்று வயது குழந்தையும் அதன் தாயாரும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

  புனேயில் உள்ள பானேர் பகுதியில் கடந்த திங்கள் அன்று மதியம் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள போக்குவரத்துக்கு நெருக்கடி மிகுந்த சாலையொன்றில் மதியம் 2.45 மணியளவில், ஐந்து பேர் கொண்ட சிறிய குழுவானது சாலையை கடக்கும் பொருட்டு, ஒரு முனையில் இருந்து சாலை மத்தியில் உள்ள தடுப்புக்கு வந்து நின்று கொண்டிருந்தனர். போக்குவரத்து குறைவதற்காக அவர்கள் காத்திருந்த பொழுது, வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

  இதில் அவர்களனைவரும் 30 அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டனர். இதில் மூன்றே வயது நிரம்பிய இஷா எனும் பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதன் தாயார் பூஜா என்பவரும் நேற்று மரணம் அடைந்தார். 

  விபத்தில் படுகாயம் அடைந்த சஜித், அவருடைய சகோஹரி நிஷா, நிஷாவின் மகன் சையத் அலி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  இந்த கோர விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தினை ஒட்டி வந்த சுஜாதா ஷெராப் என்னும் பெண் கைது செய்ப்பட்டுள்ளார். வாகன ஒட்டி வந்த பொழுது திடீரென்று கண்ணயந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

  விபத்து காட்சி (சிசிடிவி பதிவு) :  

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai