சுடச்சுட

  

  அயோத்தியில் ராமர் ஆலயம் அமைய உயிர்த் தியாகம் செய்யத் தயார்

  By DIN  |   Published on : 20th April 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  umabharti

  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக தில்லியில், செய்தியாளர்களிடம் உமா பாரதி புதன்கிழமை கூறியதாவது:
  1990-களில் ராமர் ஆலய ரத யாத்திரை நடத்தப்பட்டதில் எந்த விதமான ஒளிவு மறைவோ, சதிச் செயலோ இல்லை. அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாகவே இருந்தன.
  அந்த நடவடிக்கையில் நானும் பெருமிதத்தோடு கலந்துகொண்டேன். ராமர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக எனது முதல்வர் பதவியையே துறந்தேன். அது எனக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயமாக இருந்ததே அன்றி, அதில் வருத்தம் தெரிவிப்பதற்கோ, மன்னிப்புக் கோருவதற்கோ எதுவும் இல்லை.
  இந்த நடவடிக்கைகளில் சதித் திட்டம் இருப்பதாகக் கூறுவதே தவறு. இந்திரா காந்தி மரணத்தைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸார் தாக்குதல் நடத்தினர். அதற்காக அதன் பின்னணியில் சோனியா காந்தியும், ராஜீவ் காந்தியும் சதித் திட்டம் தீட்டியதாகக் கூற முடியுமா? அதுபோலத்தான் இந்த விவகாரமும்.
  அயோத்தியில் ராமர் ஆலயம் அமைய வேண்டும் என்பதற்காக எத்தகைய தியாகத்தை வேண்டுமானலும் செய்ய நான் தயாராக உள்ளேன் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai