சுடச்சுட

  

  ஆதார் தகவல்களைச் சேகரித்த 8 இணையதளங்களுக்கு எதிராக யுஐடிஏஐ வழக்கு

  By DIN  |   Published on : 20th April 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  UIDAI

  ஆதார் தொடர்பான சேவைகளை அளிப்பதாக உறுதி அளித்து, தனித்துவ அடையாள எண் உள்ளிட்ட பயனாளர்களின் அடிப்படை விவரங்களை சேகரித்த அங்கீகரிக்கப்படாத 8 இணையதளங்களுக்கு எதிராக இந்திய பிரத்யேக தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.
  இதுகுறித்து யுஐடிஏஐ தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே, தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  ஆதார் தொடர்பான சேவைகளை அளிப்பதாக உறுதி அளித்து பயனாளர்களிடம் இருந்து ஆதார் எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்த குற்றத்துக்காக ஆதார்அப்டேட்.காம், ஆதார்இந்தியா.காம், பிவிசிஆதார்.இன், ஆதார்பிரிண்டர்ஸ்.காம், கேட்ஆதார்.காம், டவுன்லோடுஆதார்கார்டு.இன், ஆதார்காப்பி.இன், டூப்ளிகேட்ஆதார்கார்டு.காம் ஆகிய 8 இணையதளங்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
  ஏற்கெனவே இதுபோன்று செயல்பட்ட சில இணையதளங்களுக்குத் தடை விதித்தோம். ஆனால், புதிதாக சில இணையதளங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு இயங்கி வந்ததை கண்டறிந்தோம்.
  அதைத் தொடர்ந்து, அந்த இணையதளங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற இணையதளங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  ஆதார் தகவல்களை முறைகேடாகத் திரட்டுபவர்களுக்கு 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்
  டப் பிரிவுகளில் இடம் உள்ளது.
  ஆதார் தொடர்பாக எந்தவொரு சேவையையும் பெற பொதுமக்கள் www.uidai.gov.in  என்ற அரசின் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார் அஜய் பூஷண் பாண்டே.
  முன்னதாக, ஆதார் சேவைகளை அளிப்பதாகக் கூறி செயல்பட்டுவந்த அங்கீகரிக்கப்படாத 12 இணையதளங்கள், 12 செல்லிடப்பேசி செயலிகள் ஆகியவற்றுக்கு யுஐடிஏஐ தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai