சுடச்சுட

    

    ஹிமாசலப் பிரதேச மாநிலம், சிம்லா மாவட்டத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 45 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
    இதுகுறித்து, சிம்லா துணை ஆணையர் ரோஹன் சந்த் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    உத்தரகண்ட் மாநிலம், விகாஸ் நகரிலிருந்து ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள துனி நகரை நோக்கி தனியார் பேருந்து ஒன்றில் 56 பயணிகள் புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தனர்.
    உத்தரகண்ட் - ஹிமாசல எல்லையை ஒட்டியுள்ள நேர்வா என்ற பகுதியில் சென்றபோது பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றார்.
    அப்போது பேருந்து, அங்கே பாயும் டான்ஸ் ஆற்றில் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. தகவலின்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் சிர்மார், சிம்லா மாவட்டங்களிலிருந்து மருத்துவக் குழுவினரும், மீட்புப் படையினரும் வரவழைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தொடங்கின என்றார் ரோஹன் சந்த் தாக்குர்.
    இந்நிலையில் ஆற்றிலிருந்து 45 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிம்லா காவல்துறை கண்காணிப்பாளர் டி.வி.நேகி தெரிவித்துள்ளார். எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai