சுடச்சுட

  

  உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: அத்வானியுடன் ஜோஷி ஆலோசனை

  By DIN  |   Published on : 20th April 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  adwani1

  பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
  உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான பிறகு அத்வானியில் இல்லத்துக்கு வந்த முரளி மனோகர் ஜோஷி சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் அவருடன் ஆலோசனை நடத்தினார். எனினும், அவர்கள் இருவரும் எது குறித்து விவாதித்தார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
  குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் முறையே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் முன்னிறுத்தப்படலாம் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இந்த விஷயத்தில் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
  இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோரை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai