சுடச்சுட

  

  உணவின் தரம் குறித்து புகார் கூறிய பிஎஸ்எஃப் வீரர் பணிநீக்கம்

  By DIN  |   Published on : 20th April 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  TEJ-BAHADUR1

  எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு (பிஎஸ்எஃப்) வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சமூக வலைதளம் மூலம் புகார் கூறிய வீரர் தேஜ் பகதூர் யாதவ் புதன்கிழமை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பணியமர்த்தப்பட்டிருந்த தேஜ் பகதூர், தங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து முகநூலில் கடந்த ஜனவரி மாதம் விடியோ ஒன்றை பதிவிட்டார்.
  அதில், எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு கருகிப் போன சப்பாத்தியுடன், பருப்பு என்ற பெயரில் மஞ்சள் கலந்த தண்ணீர் வழங்கப்படுவதாகவும், தங்களுக்காக வழங்கப்படும் உணவுப் பொருள்களை உயரதிகாரிகள் வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்றுவிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  இந்நிலையில், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக, எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து தேஜ் பகதூர் புதன்கிழமை அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
  இதுதொடர்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறியதாவது: இந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தேஜ் பகதூர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், விதிமுறைகளுக்குப் புறம்பாக, சமூக வலைதளத்தில் விடியோவை பதிவிட்டதன் மூலம் அவர் ஒழுங்கீன நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படை சட்டத்தின்கீழ், தேஜ் பகதூர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சட்டமானது, துணை ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும்.
  தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து மூன்று மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பு தேஜ் பகதூருக்கு உள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai