சுடச்சுட

    

    ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை: தீர்வு காண மத்திய அரசு தீவிரம்

    By DIN  |   Published on : 20th April 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதனைச் சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
    அத்தியாவசியப் பொருள்கள் நுகர்வு உரிமைச் சட்டத்தின் கீழ் பெட்ரோலியப் பொருள்கள் வருவதால், இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எரிபொருள் சேமிப்பை பிரதமர் மோடி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, பெட்ரோல் நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கத் திட்டமிட்டிருப்பதாக தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெட்ரோலிய விற்பனையாளர் சங்கங்கள் அறிவித்தன.
    ஆனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டமாகவே இந்த அறிவிப்பை பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தினர் வெளியிட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    பெட்ரோல் விற்பனையாளர்களுக்கான லாபத் தொகையை உயர்த்தி வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்ததே இந்த அறிவிப்புக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண எண்ணெய் நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai