சுடச்சுட

  
  pranab

  நேபாளத்தில் பல கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயகம் தழைக்கும் என்பதே இந்தியாவின் நம்பிக்கை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
  இந்தியாவுக்கு வந்துள்ள நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரியை கௌரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை விருந்து அளித்தார். பின்னர் அவர் பேசியதாவது:
  இந்தியாவும், நேபாளமும் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டுரீதியாகவும் நெருங்கிய தொடர்புடையவை. நேபாளத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் இந்தியா தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது.
  நாட்டில் அமைதி, நிலைத்தன்மை, பல கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்துவது போன்ற முக்கியமான காலகட்டத்தை நேபாளம் கடந்து வருகிறது. இதனைச் சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம்தான் நேபாளத்தில் ஜனநாயகமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். இந்த விஷயத்தில் நேபாளம் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உள்ளது.
  கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் உள்ளடக்கியதாக ஜனநாய நெறிமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும்.
  நேபாளத்தில் புதிய அரசமைப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமானது.
  நேபாள மக்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் அளிக்க இந்தியா தயாராக உள்ளது. வளர்ச்சி என்பதுதான இரு நாடுகளின் குறிக்கோளாக உள்ளது. இந்த இலக்கை அடைய இருநாடுகளிடையேயும் சிறப்பான ஒத்துழைப்பு தேவை. நேபாள அதிபரின் இந்திய வருகை இதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பிரணாப் பேசினார்.
  நேபாளத்தின் புதிய அரசமைப்புச் சட்டத்தில் தங்கள் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசிகளின் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai