சுடச்சுட

  
  chidambaram

  ''பாஜக ஆட்சியில் ரயில்வே துறையின் செயல்பாடு மிக மோசமான நிலையில் உள்ளது'' என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் டுவிட்டர் வலைதளத்தில் புதன்கிழமை விடுத்த பதிவில் கூறியுள்ளதாவது:
  2016-17 நிதியாண்டில் இந்திய ரயில்வேயின் செயல்பாட்டு விகிதம் மிகவும் மேசமாக உள்ளது. இதற்கு முன், 2000-01 நிதியாண்டில் இதேபோன்ற நிலை காணப்பட்டது. குறிப்பிட்ட இந்த இரு தருணங்களிலும் மத்தியில் பாஜக தான் ஆட்சியிலிருந்தது.
  ரயில்வே துறையை திறமையான அமைச்சர் கவனித்துக்கொண்ட போதிலும், தற்போது அது மோசமான நிலைமைக்கு சென்று கொண்டுள்ளது. ரயில்வேயானது அரசின் ஒரு துறை மட்டுமே என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் அண்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, 2016-17 நிதியாண்டில் ரயில்வே துறையின் செயல்பாட்டு விகிதம் 94.9 சதவீதம் என்று அந்தத் துறைக்கான இணை அமைச்சர் ராஜன் கோஹைன் தெரிவித்திருந்தார். முன்னதாக 2000-01 நிதியாண்டில், இது 98 சதவீதமாக இருந்தது.
  ரயில்வே துறை, ஒரு ரூபாயை ஈட்டுவதற்காக செலவழிக்கும் தொகையே செயல்பாட்டு விகிதமாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, 94.9 சதவீத செயல்பாட்டு விகிதம் என்பது ஒரு ரூபாயை அதாவது 100 பைசாவை வருவாயாக ஈட்டுவதற்கு ரயில்வே துறை 94.9 பைசாவை செவலழிக்கிறது என்று பொருள்.
  செயல்பாட்டு விகிதம் குறைவாக இருந்தால், ரயில்வே துறையின் நிதி நிலைமை சிறப்பாக உள்ளது என்பது இதன் விளக்கம். பொதுவாக, செயல்பாட்டு விகிதம் 80 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் ரயில்வே துறை லாபத்தில் இயங்குவதாக கருதப்படும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai