சுடச்சுட

  

  பிரிவினை அரசியல் நடத்தும் பாஜகவுக்கு எதிராக பிராந்தியக் கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்: மம்தா

  By DIN  |   Published on : 20th April 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mamta

  பிரிவினை அரசியலை நடத்தி வரும் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் அனைத்து பிராந்தியக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  மம்தா 3 நாள் பயணமாக ஒடிஸாவுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார். புவனேசுவரத்தில் வந்திறங்கிய அவர், புரிக்குச் சென்று இரவில் தங்கினார். புரியில் செய்தியாளர்களில் அவர் புதன்கிழமை கூறியதாவது:
  ஹிந்து மதத்தைத் தீவிரமாக பின்பற்றுபவள் நான். அதே நேரத்தில் மதசார்பற்றக் கோட்பாடுகளில் அதிக நம்பிக்கை கொண்டவள். ஹிந்து மதத்தை நான் தழுவியிருந்தாலும் மற்றவர்கள் (பாஜக) போல அந்த மதத்துக்கு இழுக்கைத் தேடித் தரவில்லை.
  மதம், ஜாதி, பிராந்தியம் ஆகியவற்றின் பெயரால் நாட்டில் பாஜக பிரிவினை அரசியலை நடத்திவருகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துக்களையும், மேற்கு வங்க மாநிலத்தவருக்கு எதிராக ஒடிஸா மக்களையும் தூண்டிவிடுவதுதான் அவர்களது பழக்கம்.
  பாஜக கணிப்பின்படி, ஒடிஸா, மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களின் அரசுகள் மோசம். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் பாஜக அல்லாத அனைத்து மாநில அரசுகளும் கெட்டவை. மக்களைப் பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றி வரும் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமெனில், நாட்டில் உள்ள அனைத்து பிராந்தியக் கட்சிகள் வேற்றுமைகளைப் புறந்தள்ளிவிட்டு அக்கட்சிக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். இது குறித்து ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கை வியாழக்கிழமை (இன்று) சந்தித்துப் பேசயிருக்கிறேன் என்றார் மம்தா.
  நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கி சிபிஐயால் கைது செய்யப்பட்டு புவனேசுவரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதீப் பந்தோபாத்யாய, தபஸ் பால் ஆகியோரை மம்தா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai