சுடச்சுட

  

  மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை

  By DIN  |   Published on : 20th April 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jetly

  பிரிட்டனில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா மீதான குற்றங்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளதால் அவரை இங்கு திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும், புலனாய்வு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளன.
  பிரிட்டன் சட்ட விதிகளுக்கு உள்பட்டு அந்த நடவடிக்கைகள் அமையும் என்றார் அருண் ஜேட்லி.
  பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ. 9,000 கோடிக்கு மேல் கடன் பெற்ற விஜய் மல்லையா, அவற்றை திருப்பிச் செலுத்தவில்லை.
  ஐடிபிஐ வங்கியில் ரூ. 720 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாக கைது ஆணையை சிபிஐ நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்தது. மேலும், அவர் மீது அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  இதனிடையே, மல்லையா கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியாவில் இருந்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
  இந்நிலையில், விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் லண்டனில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். எனினும், 3 மணி நேரத்துக்குள் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
  ஜாமீன் தொகை ரூ. 5.39 கோடி: சுமார் 6.5 லட்சம் பிரிட்டன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 5.39 கோடி) மதிப்பிலான பிணையில் விஜய் மல்லையா விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர்மன்ற நீதிமன்றத்தில் மே மாதம் 17-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai