சுடச்சுட

  

  மாநகராட்சித் தேர்தல்: ராஜ்நாத் சிங், அமித் ஷா இன்று பிரசாரம்

  By புதுதில்லி  |   Published on : 20th April 2017 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rs

  தில்லியில் மாநகராட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைநகரில் வியாழக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

  இதுகுறித்து, கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் பிரவீன் கபூர் கூறியதாவது:
  கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார். அவருடன், கட்சியின் தலைவர்களில் ஒருவரும், போஜ்பூரி நடிகருமான ரவி கிஷனும் பங்கேற்கிறார். அதே நாளில், கிராரி மற்றும் முஸ்தஃபாபாத் பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரப்புரையாற்றுகிறார்.

  மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, உமா பாரதி, ஹர்ஷ் வர்தன், சந்தோஷ் கங்க்வார் மற்றும் சஞ்சீவ் பல்யான் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தில்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கின்றனர் என்று பிரவீன் கபூர் கூறினார்.

  மாநகராட்சித் தேர்தலுக்கான பிரசாரம் வரும் 21-ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

   
   
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai