சுடச்சுட

  

  வங்கதேசத்தினருக்கு குடியுரிமை: உச்ச நீதிமன்றம் ஆய்வு

  By DIN  |   Published on : 20th April 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அஸ்ஸாமில் குடியேறியிருக்கும் வங்கதேசத்தினருக்கு குடியுரிமை வழங்கும் விவகாரம் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான விவாதத்தை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தொடங்கியது.
  அஸ்ஸாம் இயக்கத் தலைவர்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த 1985-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடன்படிக்கை கையெழுத்தானது. இது 1955-ஆம் ஆண்டைய குடியுரிமைச் சட்டத்தில் 6ஏ பிரிவாக சேர்க்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில், அஸ்ஸாமில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் குடியேறுவதாக குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டன. அப்போது 1955-ஆம் ஆண்டைய குடியுரிமைச் சட்டத்தின் 6-ஏ பிரிவு குறித்து 13 கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியது. அத்துடன், அந்த மனுக்கள் மீது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்த பரிந்துரைத்தது.
  அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி மதன் பி லோகுர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் புதன்கிழமை இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் கூறியபோது, 1955-ஆம் ஆண்டைய குடியுரிமைச் சட்டத்தின் 6-ஏ பிரிவு தொடர்பான 13 கேள்விகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றனர். இதுதவிர, இதே விவகாரம் தொடர்பாக வேறு யாரேனும் கேள்வி எழுப்பினாலும், அதுகுறித்து ஆய்வு செய்யத் தயாராக இருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
  மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, அஸ்ஸாம் அரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆகியோர் வரும் மே மாதம் 1-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து, வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை மே 8-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai