சுடச்சுட

  

  வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே மதுக் கடைகள் கூடாது: அதிகாரிகளுக்கு உ.பி. முதல்வர் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 20th April 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேசத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்படும் மதுக்கடைகளை அப்புறப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, நெடுஞ்சாலைக்கு அருகில் மதுக் கடைகள் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த இறைச்சிக் கூடங்களை மூடுமாறு உத்தரவிட்ட அவர், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பிரத்யேக காவல் பிரிவை உருவாக்கினார்.
  இதன் தொடர்ச்சியாக, அரசு அலுவலர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அவர் விதித்தார். இந்நிலையில், அரசு உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் லக்னெளவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது மதுக் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக பேசிய யோகி ஆதித்யநாத், காசி விஸ்வநாதர் ஆலயம், மதுரா கிருஷ்ணர் கோயில், அலாகாபாத் திரிவேணி சங்கமம் ஆகிய பகுதிகளுக்கு அருகே மது விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து விவாதித்தார். வழிபாட்டுத் தலங்களுக்கு 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக் கடைகள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட அவர், அதனைச் செயல்படுத்தத் தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai