சுடச்சுட

  

  வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் வாங்க ரூ.3,174 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  By DIN  |   Published on : 20th April 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதிதாக 16 லட்சம் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை ரூ.3,174 கோடி செலவில் கொள்முதல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இதன் மூலம் வருங்காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களுடன் கூடிய வாக்குப் பதிவு நடைமுறை நாடு முழுவதும் கடைப்பிடிக்க வாய்ப்புள்ளது.
  தேர்தலில் எவருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாக்காளர்கள் தங்களது வாக்கை உறுதி செய்து கொள்ளவும் இது பயன்படுகிறது.
  அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் சோதனையின்போது பாஜகவுக்கே அனைத்து வாக்குகளும் பதிவானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஏற்கெனவே இருந்த வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய போதிலும், அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.
  அதேவேளையில், இதற்கு முன்னதாக, மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தது. அதாவது, எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருந்தது.
  அதற்காக கூடுதலாக 16 லட்சம் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் தேவை என்று தெரிவித்திருந்த தேர்தல் ஆணையம், அவற்றைக் கொள்முதல் செய்ய ரூ.3,174 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தியிருந்தது.
  இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையத்தின் அந்தக் கோரிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் கூடுதலாக ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai