சுடச்சுட

  

  ஹெச்1பி விசா விவகாரம்: அமெரிக்க அரசிடம் முறையிடப்படும்: ஜேட்லி சூசகம்

  By DIN  |   Published on : 20th April 2017 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஹெச்1பி விசா விதிகளை கடுமையாக்குவது தொடர்பான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டிருக்கும் விவகாரம் குறித்து, அந்நாட்டு அரசிடம் முறையீடு செய்ய இருப்பதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்துள்ளார்.
  தில்லியில் செய்தியாளரிகளிடம் அருண் ஜேட்லி புதன்கிழமை பேசியபோது, இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: அமெரிக்காவில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் இது (தகவல் தொழில்நுட்பத் துறை பிரச்னைகள்) குறித்து பேச வேண்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க பயணத்தின்போது பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அதுகுறித்த விவரத்தை உங்களிடம் பிறகு தெரிவிப்பேன் என்றார் ஜேட்லி.
  அமெரிக்காவில் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றின் கூட்டமும், ஜி20 நாடுகள் அமைப்பின் கூட்டமும் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்காவுக்கு 5 நாள் பயணமாக வியாழக்கிழமை (ஏப்.20) செல்லவுள்ளார். அப்போது அமெரிக்க நிதியமைச்சர் உள்ளிட்டோரை ஜேட்லி சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
  முன்னதாக, ஹெச்1பி விசா விதிகளை கடுமையாக்குவது குறித்த உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதற்கு, இந்தியாவில் உள்ள தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது கவலையை தெரிவித்துள்ளன. நாஸ்காம், அசோசேம் ஆகிய அமைப்புகளும் இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளன.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai