சுடச்சுட

  

  மாற்றுத் திறனாளி ஊழியரை அவமானப்படுத்திய உத்தரபிரதேச அமைச்சர் : வைரல் வீடியோ!

  By PTI  |   Published on : 20th April 2017 04:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sathyadev

   

  லக்னோ: பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் ஆதித்யநாத்தின் செயல்பாடுகளுக்கு மாறாக மாற்றுத் திறனாளி ஊழியர் ஒருவரை, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் வசைபாடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.    

  பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே, 'மான் கி பாத்' எனபப்டும் வானொலி நிகழ்ச்சியில்  உரையாற்றும் பொழுது பிரதமர் மோடி, மாற்றுத் திறனாளிகளைக் குறிக்க "விக்லாங்" என்னும் வார்த்தைக்கு பதிலாக, 'புனிதமான உடல்' என்னும் பொருள்படும் "திவ்யாங்"  என்னும் வார்த்தையை பயன்படுத்த வேண்டும்  என்று கோரிக்கை வைத்திருந்தார்.

  அதேபோல சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள யோகி ஆதித்யநாத் கூட சில நாட்களுக்கு முன்னர், மாநில 'மாற்றுத் திறனாளிகள் நலத்துறை' என்னும் பெயரைக் கூட'திவ்யங் முன்னேற்றத் துறை " என்று பெயர்மாற்றம் செய்திருந்தார்.

  இந்நிலையில் மாநில காதிமற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சரான சத்யதேவ் பச்சோரி நேற்று தலிபாக் பகுதியில் உள்ள அவரது துறை அலுவலகம் ஒன்றிற்கு 'திடீர்' விசிட் செய்தார். அப்பொழுது அங்கே துப்புரவு பணியில் இருந்த மாற்றுத் திறனாளியான ஒப்பந்த தொழிலாளி ஒருவரை பார்த்தார்.உடனே அதிகாரிகளிடம், 'அவரது உடல் ஊனத்தைக்க குறிக்கும் சொற்களைக் கூறி, இப்படிப்பட்ட ஒருவரை ஏன் வேலைக்கு வைத்திருக்கிறீர்கள்? இதன் காரணமாகத்தான் அலுவலகம் அசுத்தமாக இருக்கிறது' என்று கடிந்து கொண்டிருக்கிறார்.

  பிரதமரும் மாநில முதல்வரும் மாற்றுத் திறனாளிகள் நலத்தின் பொருட்டு முயற்சிகள் மேற்கொள்ளும் பொழுது, அமைச்சர் ஒருவரின் பொறுப்பற்ற பேச்சு கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. இந்த வீடியோவானது தற்பொழுதுசமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  வீடியோ  இணைப்பு:

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai