சுடச்சுட

  

  பெங்களூர் சிறையில் ஆங்கிலம் கற்க விரும்புகிறாராம் சசிகலா?

  By DIN  |   Published on : 20th April 2017 04:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sasikala

  பெங்களூர்: அடுத்த 4 ஆண்டுகளுக்கு பெங்களூர் சிறையில் நேரத்தை வீணடிக்காமல் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளாராம் வி.கே. சசிகலா.

  மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் - ஆங்கிலம் இரண்டிலுமே புலமைப் பெற்றவர். அவருடன் பல ஆண்டு காலம் தங்கி இருந்து அரசியல் கற்றுக் கொண்ட சசிகலா, ஆங்கிலம் கற்கத் தவறிவிட்டார்.

  கான்வென்ட்டில் படித்த ஜெயலலிதாவுக்கு ஆங்கிலம் அத்துப்படி. அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஆங்கிலமும் மிகப் பெரிய பலமாக இருந்தது. அவருக்கு உற்றத் தோழியாக இருந்த சசிகலா, பெங்களூர் சிறையில் தனது மொழித் திறனை பட்டைத் தீட்டிக் கொள்வது என முடிவு செய்துள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில், வி.கே. சசிகலா, சிறைத் துறை அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளாராம். அதாவது, தனக்கு ஆங்கிலம் கற்பிக்க ஒரு ஆசிரியரை நியமிக்க முடியுமா என்று கேட்டுள்ளார். இதற்கு, சிறைத் துறை நிர்வாகம் இன்னும் பதில் சொல்லவில்லை.

  ஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலா, சிறையில் இருந்தபடியே, தமிழக அரசியலில் நடக்கும் நடப்புகளை அறிந்து கொள்ள, தமிழக செய்தித் தாள்களை படித்து வந்தார். ஆனால், தமிழ் செய்தித் தாள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அங்கு வரும் ஆங்கில செய்தித் தாள்களை படிக்கவே, அவர் ஆங்கிலம் கற்க விரும்புவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai