சுடச்சுட

  

  அருணாசலப் பிரதேச பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாட முடியாது: இந்தியா பதிலடி

  By DIN  |   Published on : 21st April 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனப் பெயர்களை சூட்டுவதால், அந்தப் பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாட முடியாது என்று இந்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
  அருணாசலப் பிரதேசத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளுக்கு பெயரிடுவதால், அந்தப் பகுதிகளுக்கு சீன உரிமை கோர முடியாது. இப்போதும், எப்போதும் அருணாசலப் பிரதேச மாநிலம், இந்தியாவின் ஓர் அங்கமாக இருக்கும்.
  அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 6 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியது தொடர்பாக, சீன அரசு அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் செய்திகளின் வாயிலாகத் தெரியவந்துள்ளன என்றார் அவர்.
  சீன அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி திபெத் பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா, அருணாசலப் பிரதேசத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் 6 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai