சுடச்சுட

  
  stamp

  மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட, மிகவும் அரிதான தபால் தலைகள், பிரிட்டனில் 5 லட்சம் பவுண்டுக்கு (சுமார் ரூ.4 கோடி) ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
  இதுகுறித்து அந்த தபால் தலைகளை ஏலத்துக்கு விட்ட 'ஸ்டான்லி கிப்பன்ஸ்' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகாத்மா காந்தியின் உருவத்தைத் தாங்கி, 1948-ஆம் ஆண்டு வெளிவந்த, 10 ரூபாய் மதிப்பு கொண்ட தபால் தலைகள், தற்போது உலகில் 13 மட்டுமே உள்ளன. இந்த அரிய 4 தபால் தலைகளைக் கொண்ட தொகுதி, அண்மையில் ஏலத்துக்கு விடப்பட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தபால் தலை சேகரிப்பாளர் ஒருவர் அதனை 5 லட்சம் பவுண்ட் கொடுத்து ஏலத்தில் எடுத்தார். இதன் மூலம், இந்தியத் தபால் தலைகளிலேயே மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பெருமையை மகாத்மா காந்தியடிகளின் தபால் தலைகள் பெற்றுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  பிரிட்டனில் வசிக்கும் பணக்கார இந்திய வம்சாவளியினர் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அரும்பொருள்களை விரும்பும் ஆர்வலர்களால் இந்திய அரும்பொருள்களுக்கான சந்தையின் மதிப்பு அதிகரித்து வருவதாக 'ஸ்டான்லி கிப்பன்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கீத் ஹேடில் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai