சுடச்சுட

  

  குஜராத், ஹிமாசல் தேர்தல் ஏற்பாடுகள்: ஜூலைக்குள் புதிதாக 30,000 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள்

  By DIN  |   Published on : 21st April 2017 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  evmpat

  குஜராத், ஹிமாசலப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுக்குத் தயாராகும் வகையில், வரும் ஜூலை மாத இறுதிக்குள் புதிதாக 30,000 வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களைத் தேர்தல் ஆணையம் கொள்முதல் செய்யவுள்ளது.
  182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் பேரவையின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஹிமாசலப் பிரேதச மாநில பேரவையின் பதவிக்காலம் ஜனவரி 7-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவ்விரு சட்டப் பேரவைகளுக்கும் நிகழாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
  இதுதொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர், தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது: தேர்தல் ஆணையத்திடம் தற்போது 53,500 வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் உள்ளன. அடுத்த மூன்று மாதங்களில் புதிதாக 30,000 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் வாங்கப்படும். குஜராத், ஹிமாசலப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கு 84,000 வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் போதுமானதாகும் என்றார் அவர்.
  அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
  மேலும், வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்கு மீண்டும் வாக்குச் சீட்டு தேர்தல் முறையையே பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் 16 அரசியல் கட்சிகள் மனு கொடுத்துள்ளன.
  இந்நிலையில், வாக்குப்பதிவின்போது வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது 'யாருக்கு வாக்களித்தோம்?' என்பதை வாக்காளரால் உறுதிசெய்ய முடியும்.
  எனவே, எதிர்வரும் குஜராத், ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai