சுடச்சுட

  

  குல்பூஷண் விவகாரம்: விசாரணை விவரங்களை கோரியது இந்தியா

  By DIN  |   Published on : 21st April 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kulpooshan

  பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவுக்கு எதிராக அந்நாட்டு ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை விவரங்களை வழங்குமாறு இந்தியா கோரியுள்ளது.
  இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே கூறியதாவது:
  குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி கிடைக்க அனுமதிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்திய அரசு சார்பில் 15 முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அதற்கு பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை.
  இந்நிலையில், குல்பூஷண் ஜாதவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை விவரங்களை அந்நாட்டு அரசிடம் கோரியிருக்கிறோம். அதேபோல், குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான நடைமுறை விவரங்களையும் அந்நாட்டு அரசிடம் கேட்டிருக்கிறோம்.
  இதற்கு இதுவரை பாகிஸ்தானிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
  தற்போதைய சூழ்நிலையில், குல்பூஷண் ஜாதவ் எங்கு தங்க வைக்கப்பட்டிருக்கிறார், எந்த நிலையில் இருக்கிறார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என்றார் கோபால் பக்லே.
  முன்னதாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதர் சையது ஹைதர் ஷாவுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் புதன்கிழமை அழைப்பாணை விடுக்கப்பட்டது. பின்னர், நேரில் ஆஜரான அவரிடம், குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி கிடைப்பதற்கு அனுமதி வழங்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai