சுடச்சுட

  

  தேர்தல் பணிகள்: ஐ.நா.வுக்கு இந்தியா ரூ.1.6 கோடி நிதியுதவி

  By DIN  |   Published on : 21st April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பதற்றம் நிலவும் நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல்களை நடத்துவதற்காக, ஐ.நா.வின் தேர்தல் விவகாரப் பிரிவுக்கு இந்தியா 2.5 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.1.6 கோடி)நிதியுதவி அளித்துள்ளது.
  ஐ.நா.வுக்கான இந்திய முதன்மைச் செயலர் ஈனாம் கம்பீர், இதற்கான காசோலையை ஐ.நா. தேர்தல் விவகாரப் பிரிவு அதிகாரியிடன் புதன்கிழமை அளித்தார்.
  இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அந்த ஐ.நா. பிரிவு தெரிவித்துள்ளதாவது:
  ஐ.நா.வின் தேர்தல் உதவிகளுக்காக, 2.5 லட்சம் டாலர் நிதியுதவியை இந்தியா தாமாக முன்வந்து அளித்துள்ளது. அந்தத் தொகைக்கான காசோலையை, இந்திய அதிகாரியிடமிருந்து ஐ.நா. தேர்தல் விவகாரப் பிரிவு அதிகாரி கே. ஷியோடானி பெற்றுக்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai