சுடச்சுட

  

  புதிய நோட்டுகளை அடையாளம் காண்பதில் சிரமம்: பார்வையற்றோர் புகார்

  By DIN  |   Published on : 21st April 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டுள்ள ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை அடையாளம் காண்பது பார்வைத் திறனற்றவர்களுக்கு சவாலாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  புதிய நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் கூடுதலாக உள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. ஆனால், அதில் தங்களுக்குத் தேவையான சில அம்சங்கள் இடம்பெறவில்லை என்று பார்வைத் திறனற்றவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
  இதுதொடர்பாக, தேசிய பார்வையற்றோர் நலச் சங்கத்தின் செயலர் ஜோக்கிம் ரபோஸ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவதாகச் செய்திகள் வெளியானபோதே, பார்வைத் திறனற்றவர்களுக்கான அம்சங்களை அதில் கூடுதலாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
  இதனால் புதிய நோட்டுகளின் மதிப்பை அறிந்து கொள்வது பார்வையற்றோருக்கு சிரமமாக உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai