சுடச்சுட

  

  புத்தகம், சீருடை விற்பனையை நிறுத்துங்கள்; நீங்கள் நிறுவனம் நடத்தவில்லை: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ காட்டம்

  By DIN  |   Published on : 21st April 2017 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cbse


  புது தில்லி: தரமான கல்வியை வழங்குவது மட்டுமே குறிக்கோள், நீங்கள் நடத்துவது பள்ளிகள்... வியாபார நிறுவனங்கள் அல்ல என்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் காட்டமான அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியுள்ளது.

  உடனடியாக, சிபிஎஸ்இ பள்ளி வளாகங்களில் செயல்படும் சீருடை, செருப்பு, நோட்டுப் புத்தகக் கடைகளை மூடும்படியும் பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

  இதுபோன்று பள்ளிகளில் கடைகள் திறப்பது, பள்ளிகளின் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

  நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன.

  சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் இயங்கும் கடைகளில் மட்டுமே அல்லது பள்ளியால் குறிப்பிடப்படும் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க பெற்றோர் வற்புறுத்தப்படுவதாக, சிபிஎஸ்இ-க்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

  இதையடுத்தே, பள்ளிகளுக்கு இந்த அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திலேயே புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதை எந்த வகையிலுமே ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கான உயர் அதிகாரி கே. சீனிவாசன் இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பள்ளி வளாகத்திலோ அல்லது பள்ளி குறிப்பிடும் வேறு ஒரு கடையிலோ தான், புத்தகங்கள், நோட்டு, பென்சில், பேனா முதல், சீருடை, ஷூ, பள்ளிப் பை என அனைத்தையும் வாங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் நிர்பந்திப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.

  இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று பள்ளிகளை எச்சரிப்பது இது முதல் முறை இல்லை என்றாலும், இது இறுதியான எச்சரிக்கையாக இருக்கும் என்றும், ஒருவேளை இதுபோன்ற வியாபார நடவடிக்கைகளை பள்ளிகள் தொடர்ந்தால், நிச்சயம் அந்த பள்ளியின் கல்வி அளிக்கும் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai