சுடச்சுட

  

   

  கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்களில் ஒன்றான நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட மிகப் பழமையான தங்கப் பதக்கம் மாயமாகியுள்ளது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
  இதுதொடர்பாக, திருவிதாங்கூர் தேவஸ்வ வாரியத்தின் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், திருவனந்தபுரத்தில் பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  தங்கப் பதக்கம் மாயமானது தொடர்பாக காவல்துறை குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடுமாறு, முதல்வர் பினராயி விஜயனிடம் மனு அளிக்க உள்ளேன்.
  சுவாமிக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டதை, பக்தர்கள் கடந்த 13-ஆம் தேதி கடைசியாக பார்த்துள்ளனர். எனினும், அது மாயமான விஷயம் கடந்த வியாழக்கிழமையன்றுதான் வெளியே தெரியவந்துள்ளது. தங்கப் பதக்கம் காணாமல் போனதை வெளிப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட அந்த தங்கப் பதக்கம், திருவிதாங்கூர் செம்பகேசரி மன்னரால் 450 ஆண்டுகளுக்கு முன் அம்பலப்புழை கோயிலுக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai