சுடச்சுட

  

  அல்வர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 22nd April 2017 11:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜஸ்தான் மாநிலம், அல்வரில் பசுப் பாதுகாவலர்களால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
  இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தலைமையிலான குழுவினர், மாநில ஆளுநரை சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் சச்சின் பைலட் கூறியதாவது:
  அல்வரில் கடந்த 1-ஆம் தேதி பேலு கான் (55) என்பவர் பசுப் பாதுகாவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், காவல்துறையினரின் செயல்பாடும் மாநில அரசின் நிலைப்பாடும் மோசமான முன்னுதாரணங்களாக உள்ளன. இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மௌனம் காப்பது வியப்பளிக்கிறது.
  மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்கெட்டுவிட்டது. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
  பேலு கான் கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்றார் சச்சின் பைலட்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai