சுடச்சுட

  

  ஆப்கன் ராணுவ தளத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

  By DIN  |   Published on : 22nd April 2017 11:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Modi

  ஆப்கானிஸ்தானில் ராணுவ தளத்தின் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
  ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியிலுள்ள மஸார்-இ-ஷெரீஃப் நகரில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் சுமார் 50 வீரர்கள் பலியாகினர். அங்குள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களையும், உணவருந்தும் கூடத்தில் இருந்தவர்களையும் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
  இந்நிலையில், பிரதமர் மோடி சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், "மஸார்-இ-ஷெரீஃப் நகரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai