சுடச்சுட

  

  உயிர் காக்கும் மருந்துகளில் 60 வகையான மருந்துகள் தரக்குறைவானவை: இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம்

  By DIN  |   Published on : 22nd April 2017 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுதில்லி: காய்ச்சல், உடல் வலி போன்றவற்றுக்கு மக்கள் பயன்படுத்தும் 60 வகையான மருந்துகள் தரக்குறைவானவை என்று இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  உடல் வலி, காய்ச்சல் போன்றவற்றுக்கு, மக்கள் பொதுவாக பயன்படுத்தும் சில மாத்திரைகள் உட்பட 60 வகையான மருந்துகள் தரக்குறைவானவை என இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

  இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உடல்வலி மற்றும் காய்ச்சல் போ;ன்றவற்றுக்கு மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் Combiflam, D-cold Total ஆகிய மருந்துகள் தரக்குறைவானவை என தெரிவித்துள்ளது.

  இவை மட்டுமின்றி, சளி, மூச்சுத் திணரல் போன்ற உபாதைகளுக்கு பயன்படுத்தப்படும் Oflox-100, Theo Asthalin மாத்திரைகள் போன்றவைகளும் போதிய தரமில்லாதவை என மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  மொத்தம் 60 வகையான மருந்துகளை இந்த வாரியம் தரக்குறைவான மருந்துகள் பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai