சுடச்சுட

  

  குடியரசுத் தலைவர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த்தை தேர்வு செய்ய பாஜக திட்டமா...?

  By DIN  |   Published on : 22nd April 2017 02:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajinikanth

  புது தில்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக தில்லி பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. அப்பதவிக்கு நடைபெற உள்ள தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  இதற்கு, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் பெயர்கள் தில்லி அரசியல் வட்டாரங்களில் அடிபடுகின்றன.

  இதனிடையே, குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை நிறுத்தலாம் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை அண்மையில் தெரிவித்திருந்தது.

  'ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்; எங்களது கட்சி சார்பில் அப்பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை சரியான நேரத்தில் அறிவிப்போம். அதற்கு முன்பு எங்களது கட்சி ஆலோசனை நடத்தும்' என்றார். எனினும், அப்பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்று பாகவத் கூறிவிட்டார்.

  இந்நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக தில்லி வட்டார தகவல்கள் கூறுகின்றது.

  இதன் மூலம் தமிழகத்தில் வலுவாக காலுன்றலாம் என்றும், அவரின் ரசிகர்கள் மத்திய அரசினை ஆதரிப்பார்கள் என்றும் பாஜக நினைப்பதாகவும் பேசப்படுகிறது.

  மேலும், ரஜினியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தும் போது எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்று பாஜக கருதலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

  தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு லட்சக்கணக்கான தீவிர ரசிகர்கள் உள்ளனர். இதனால் அரசியலில் அவரது ஆதரவை பெறும் முயற்சியாக,  கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்டு பாஜகவின் பல முன்னணி தலைவர்கள் முயற்சி செய்ததாகவும் ஆனால், ரஜினியோ, கழுவுகிற மீனின் நழுவுகிற மீனாய், நமக்கு இந்த அரசியல் சரிபட்டு வராது என பின்வங்கியது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai