சுடச்சுட

  
  Rahul

  சமூக வலைதளங்கள் மூலம் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கூறிய அறிவுரையை, அவரே பின்பற்றுவதில்லை என்று காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
  இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளதாவது:
  அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கூறும் நரேந்திர மோடி, தானே அந்த அறிவுரையைப் பின்பற்றுவது கிடையாது.
  அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதன் மூலம், நரேந்திர மோடி அவர்களை வழிநடத்த வேண்டும் என்று தனது சுட்டுரைப் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
  முன்னதாக, மக்கள் நலனுக்கான முடிவுகளை அதிகாரிகள் துணிச்சலுடன் எடுக்க வேண்டும் என்று தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பின்போது கூறிய பிரதமர் மோடி, "சமூக ஊடகங்களை மக்கள் நலனுக்காக அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்; சுய தம்பட்டம் அடிப்பதற்குப் பயன்படுத்தக் கூடாது' என்று கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai